Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சேற்றில் சிக்கிய வாகனம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. நீலகிரியில் பரபரப்பு….!!

சேற்றில் சிக்கிய சரக்கு வாகனத்தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறும்  சாலைகள் கனமழை காரணமாக சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் கேரட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த சரக்கு வாகனம் மரப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது அதன் டயர் சேற்றில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் தொடர்ந்து அதனை இயக்க முயற்சித்தும் அங்கிருந்து நகர முடியவில்லை.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அனைத்து வாகனங்களையும் மாற்றுப்பாதை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு திருப்பி விட்டனர். அதன்பிறகு பொக்லைன் எந்திரம் மூலம் சேற்றில் சிக்கிய வாகனத்தை மீட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சாலைகளில் கவனமாக செல்ல வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |