Ipl போட்டி மூலம் தோனி மீண்டும் இந்திய அணிக்குள் வர வாய்ப்பில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் நல்ல பேட்டிங், கீப்பிங் அணியை நல்ல முறையில் வழி நடத்துவது உள்ளிட்ட திறமைகளால் மீண்டும் இந்திய அணியில் தோனி வர வாய்ப்பிருப்பதாக பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பதிலளித்துள்ளார். அதில்,
என்னை பொருத்தவரை மூத்த வீரரான தோனி மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஐபிஎல் போட்டி மூலம் மீண்டும் அவர் இந்திய அணிக்குள் வரலாம் என்ற கருத்துக்கள் பரவி வருகின்றன.
ஆனால் அதனை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். ஏனெனில் தேர்வாளர்கள் அவரை ஒதுக்கி விட்டு அவருக்கு மாற்று வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர் என்பதை ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய அணிக்குள் தோனி மறுபிரவேசம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று என்று தெரிவித்தார்.