செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து கொரோனா காலகட்டத்தில் தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளிலிருந்து இனி பயணிகள் விமான சேவையை தொடங்குவதற்கு ஓமன் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதிலும் மிக முக்கியமாக வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு அந்தந்த அரசாங்கம் தடை விதித்துள்ளது.
அதன்படி ஓமன் அரசாங்கமும் சிகப்பு பட்டியலில் இருந்த இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஓமன் அரசாங்கத்திலுள்ள சில முக்கிய துறைகளுடன் விமான சேவை தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நடத்தப்பட்ட ஆலோசனையின் மூலம் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளிலிருந்து இனி பயணிகள் ஓமன் நாட்டிற்கு வருவதற்கான தடையை நீக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி வருகின்ற செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து ஓமன் நாட்டில் அமலுக்கு வரவுள்ளது.
இதனையடுத்து ஓமன் நாட்டிற்கு செல்லும் பயணிகள் கட்டாயமாக பி.சி.ஆர் பரிசோதனையை செய்து அதன் முடிவுகளை க்யூஆர் கோடுடன் இணைத்திருக்க வேண்டும்.