ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் விமான சேவையை தொடங்குவது தொடர்பாக அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டிலுள்ள ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி அந்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனையடுத்து கத்தார் அரசாங்கம் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள காபுல் விமான நிலையத்தை மீண்டும் உபயோகப்படுத்துவதற்கு உதவி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது ஆப்கனிலுள்ள அரியனா என்னும் ஏர்லைன்ஸ் நிறுவனம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டின் உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை அரியனா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை மேலாளர் தெரிவித்துள்ளார்.