Categories
உலக செய்திகள்

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள்…. மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை…. தகவல் வெளியிட்ட பாகிஸ்தான்….!!

தலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு விமான சேவையை தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

தலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சிக்கியதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் பிற நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்காக காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளார்கள். இதனால் பாதுகாப்பு கருதி உலக நாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு செல்லும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசாங்கம் தலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு விமான சேவையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச விமான நிலையம் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு விமான சேவையை தொடங்குவது தொடர்பான நடவடிக்கைகள் முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் நாட்டிலிருந்து மீண்டும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு விமான சேவை தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |