இந்தியாவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் kwane Stewart. இவர் ஒருநாள் காபி ஷாப்பில் இருந்து வெளியே வந்து ஒரு விஷயத்தை கவனிக்கிறார். அந்த சாலையில் வீடு இன்றி வாழும் ஒருவர் தனது மடியில் நாயை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அந்த நாயின் உடம்பு முழுவதும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டு மருத்துவர் அந்த நபரிடம் சென்று “ஐயா, நான் ஒரு கால்நடை மருத்துவர். நீங்கள் உங்களுடைய நாயை தந்தால் நான் குணப்படுத்தி விடுவேன்” என்று கூறியிருக்கிறார்.
இதனையடுத்து அவரும் தனது நாயை எடுத்து அந்த கால்நடை மருத்துவரிடம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவரும் நாய்க்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி விடுகிறார். அதன்பின் சிறிது நாட்கள் கழித்து அந்த மருத்துவர் மறுபடியும் அதே சாலையில் வீடு என்று வாழும் நபரை பார்த்துள்ளார். அவரிடம் சென்று கால்நடை மருத்துவர் பேசியுள்ளார். அதற்கு அந்த நபர் கூறியதாவது “எங்களுக்கு வீடு இல்லாத காரணத்தினால் நானும் எனது நாயும் ஒரு நாள் கூட நிம்மதியாக உறங்கியது இல்லை.
ஆனால் நீங்கள் என் நாயை குணப்படுத்திக் கொடுத்த அன்று நானும் எனது நாயும் நிம்மதியாக உறங்கினோம். அதற்காக நாங்கள் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம்” என்று மனமுருக கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த கால்நடை மருத்துவர் கண்கலங்கி அங்கேயே நின்று கொண்டிருந்தார். இதனை அந்த கால்நடை மருத்துவர் அப்படியே விட்டுவிடாமல் வீடில்லாமல் தெருக்களில் கஷ்டப்படும் 400 பேருக்கும் மேற்பட்டோருடைய செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார்.
இதனைப் பார்த்த செய்தி நிறுவனங்கள் எதற்காக தெருவில் வாழ்பவர்களுடைய செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு கால்நடை மருத்துவர் கூறியதாவது “அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் இவர்களுக்கு தான் வளர்க்கும் செல்லப்பிராணிகள்தான் உலகமே. அப்படிப்பட்ட அந்த செல்லப்பிராணிகளுக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போது அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது யாரும் அவர்களை உள்ளே கூட விட மாட்டார்கள். அதனால் தான் நானே இந்த சிகிச்சை அளிக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.