பாகிஸ்தானில் பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் (ஒரு ஆண், இரண்டு குழந்தைகள், 4 பெண்கள்) பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு திருமணத்தில் பங்கேற்று விட்டு காரில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலத்தில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் கார் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்கு கீழே உள்ள ஆற்றில் விழுந்து கார் பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இந்த விபத்து இரவு நேரத்தில் நடந்ததால் யாருக்கும் இது குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று மீட்பு குழுவினருக்கு ஆற்றில் கார் ஒன்று அடித்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அந்த காரை மீட்புக்குழுவினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர். ஆனால் அதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.