Categories
அரசியல்

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா – தமிழக சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்த்திலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில்,  “டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும், 2 பேருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது நபர் சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்புடைய 28 வயது ஆணுக்கு திருவண்ணாமலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று பதிவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 74 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |