Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ஏழு பேர் விடுதலை – ஆளுநர் பதில் …!!

7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் பதிலளித்துள்ளார் என்று சட்டத்துறை அமைச்சர் CV சண்முகம் பதிலளித்துள்ளார்.

சட்டத்துறை மானிய கோரிக்கை  மீதான விவாதம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் 7 பேர் விடுதலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக எம்எல்ஏ தாயகம் கவி கேள்வி எழுப்பினார். இதற்க்கு  சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பதிலளிக்கையில், 7 பேர் விடுதலை விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதில் ஆளுநருக்கு அனுப்பி இருந்தோம். அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும், இறுதி முடிவும் ஆளுநர் எடுக்கவில்லை ஆனால் பதிலளித்துள்ளார் என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தபோது உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் இந்த வழக்கை பொறுத்தவரை  ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் சதித்திட்டங்கள் தீட்டி ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் ஆளுநர் கையில் இருக்கிறது. ஆளுநர் தற்போது என்ன முடிவு எடுத்துள்ளார் என்ற விளக்கத்தை தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபட்டது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு தீர்மானம் குறித்து ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்க்கு ஆளுநர் செயலகத்திலிருந்து கிடைத்துள்ள பதிலில் பல்வேறு புலனாய்வு அமைப்புககள் தற்போது இதனை விசாரித்து வருகிறது. அவர்கள் உச்சநீதிமன்றத்தில்தாக்கல் செய்யும் இடைக்கால அறிக்கையில் என்ன அம்சங்கள் இடம் பெற்றுள்ளதை பொருத்தே ஆளுநர் தனது இறுதி முடிவை தெரிவிப்பார் என்று ஆளுநர் செயலகம் விளக்கத்தை கொடுத்துள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |