ஒரே சமயத்தில் ஏழு ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பொன்பரப்பி கிராமத்தில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற ஆடுகள் திரும்பவும் பட்டிக்கு வந்து சேர்ந்துள்ளது. அதன்பின் சிறிது நேரத்தில் தண்ணீர் வைப்பதற்காக ஆசைத்தம்பி சென்றுள்ளார். அப்போது ஒரே சமயத்தில் ஏழு ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசைத்தம்பி இது பற்றி வருவாய் துறை அதிகாரிகளுக்கும், கால்நடை துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு இறந்து போன ஆடுகளின் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்ய கால்நடை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். பின்னர் அதன் முடிவு வந்த பிறகு ஆடுகள் எப்படி இறந்தது என்பது குறித்து தெரியவரும். மேலும் இச்சம்பவம் ஆசைத்தம்பி குடும்பத்தினர்களுக்கு இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.