Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழை… 17 பேர் மரணம்…. 30க்கும் மேற்பட்டோர் காயம்!

பாகிஸ்தான் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக  ஏற்பட்ட விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. அந்நாட்டின் கைபர் பக்துவா மற்றும் சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகள் இடிந்தும், சாலைகளில் மழை நீர் சூழ்ந்தும் காணப்படுகின்றது.

Image result for 17 killed as heavy rain wreaks havoc in Pakistan

இந்நிலையில், அந்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி 17 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் அனைத்தையும் வழங்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |