Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில்…… 90% பேருக்கு…… ஆய்வில் வெளிவந்த அந்த உண்மை….!!!!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருகின்ற 10-ஆம் தேதி முதல் இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. மேலும் 60 வயதைக் கடந்தவர்கள், முன்கள பணியாளர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதாவது பிரித்தானியாவில் கொரோனா காரணமாக வெறும் 11,452 பேர் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் “2022-ம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமைய வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 90 சதவீதம் மக்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் அவர்களுக்கு மருத்துவ உதவி எதுவும் தேவைப்படுவதில்லை என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். எனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மேலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவாகவே இருப்பதாக ஆய்வு தரவுகள் காட்டுகின்றன.

Categories

Tech |