Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடும் குளிர்…. 22 பேர் பலி…. 2000 விமானங்கள் ரத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அமெரிக்காவில் குளிர்கால புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு அதி தீவிரமாக இருக்கிறது. மோசமான வானிலை காரணமாக அமெரிக்காவின் இயல்பு நிலை முற்றிலும் முடங்கியுள்ளது. இங்குள்ள பல மாநிலங்களில் வெப்பநிலையானது மைனஸ் 0 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாகவே இருக்கிறது. அதே சமயம் தொடர்ந்து பனிப்பொழிவு நீடித்துக் கொண்டே இருப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எதுவும் இன்றி அமெரிக்கா களை இழந்து காணப்படுகிறது. அதோடு பனிப்பொழிவின் காரணமாக சாலைப்போக்குவரத்து முதல் விமான போக்குவரத்து வரை அனைத்து போக்குவரத்துகளும் கடுமையான அளவுக்கு முடங்கியுள்ளது.

ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து கிளம்பியுள்ள கடும் புயலின் காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகிறார்கள். இந்த புயலின் காரணமாக அமெரிக்காவில் 20 கோடி பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கடும் குளிரின் காரணமாக இதுவரை அமெரிக்காவில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கடும் குளிரின் காரணமாக இன்று 2000 விமானங்கள் ரத்து  செய்யபட்டுள்ளது.

Categories

Tech |