அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த மாகாணத்தின் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எப்போது மின்சாரம் மீண்டும் கிடைக்கும் என்பது தெரியவில்லை. மேலும் இந்த பனிப்பொழிவால் தடுப்பூசி செலுத்தும் பணிகளும், தடுப்பூசி சேமித்து வைக்கும் வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பனி பொழிவை அடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பனிப்புயலால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகளிலும் விபத்து ஏற்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.