நாடு முழுவதும் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதையும் தன் கவனத்திற்கு திருப்ப விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். இதுபோன்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற விவசாயிகள் அதில் ஒரு பகுதியாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். இன்று பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக தீவிரமான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் ரயில் சேவையை உறுதிசெய்ய ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த ரயில் மறியலை தடுத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காகவும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில் பாதுகாப்புக்காக பஞ்சாப் ஹரியானா உத்தரப் பிரதேசத்தில் கூடுதல் படைகள் இ றக்கப்பட்டுள்ளன. டெல்லி மெட்ரோ ரயில்வே கழகம் ரயில் மறியலை முன்னிட்டு திக்ரி எல்லை பண்டிட் ஸ்ரீராம் சர்மா, பகதூர்கார் சிட்டி மற்றும் பிரிகேடியர் ஹோஷியர் சிங் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களை மூட அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லியில் மங்களூர் ரயில் நிலையத்திலும் அரியானாவில் பல்வால் ரயில் நிலையத்திலும் உத்தரப்பிரதேசத்தில் காசியாபாத் ஜங்ஷனிலும் பாதுகாப்பு பணியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியானா ரயில் நிலையத்தில் விவசாயிகள் தண்டவாளங்களில் மறித்தபடியும் அதில் அமர்ந்தபடியும் போராட்டம் மேற்கொண்டனர். மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஐக்கிய முன்னணி பெயரிலான விவசாய அமைப்பினை சேர்ந்த விவசாயிகள் ஜம்முவில் உள்ள சன்னி ஹிமத் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்தபடி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பீகாரில் ஜன அதிகாரி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பாட்னா ரயில்வே நிலையத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் ரயில் எஞ்சினின் முகப்பு மீது ஏறி கொடியை காட்டி கோஷங்களை எழுப்பினர் மற்றும் பேனர்களை கைகளில் வைத்துக் கொண்டு ரயில் தண்டவாளத்தில் படுத்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.