செவிலியர்களை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெடுஞ்செழியன் காலனி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விபத்தில் காயமடைந்து உடுமலை பகுதியில் உள்ள கோகுல் பாலிகிளினிக் என்ற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். அங்கு சேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் மருத்துவமனைக்கு நெடுஞ்செழியன் காலனி பகுதியில் வசிப்பவர்கள் சிலர் வந்து செவிலியர்களை தாக்கி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் அங்கு பணியாற்றும் செவிலியரான செல்வி என்பவர் உடுமலை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரஞ்சித், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்துஏரிப்பாளையம் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவரை கைது செய்தனர். அதன்பின் காவல்துறையினர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் மற்றவைகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.