பிரபல நடிகை நர்சாக மாறி மக்களுக்கு சேவை செய்வதால் ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பல முன்னணி பிரபலங்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற பல உதவிகளை செய்து வருகின்றார்கள். இந்த வரிசையில் ஹிந்தியில் பிரபல நடிகையான ஷிகா, நர்ஸாக பணியாற்றி வருகிறார். 1000 பேருக்கு மேல் மருத்துவ உதவிகளை செய்துள்ளார். மேலும் இவர் நர்சாக பணிபுரிவதற்கான ஊதியம் ஏதும் பெருவதில்லையாம்.
இச்செய்தி அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. நர்சிங் படித்துள்ள ஷிகா இச்சமயத்தில் மக்களுக்கு உதவி வருவதால் மக்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். இவரின் புகைப்படங்கள் இணையதளத்தில் அதிகமாக பரவி வருகிறது.