Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்களை மீண்டும் சேர்க்க மாட்டார்கள்…. செவியர்களின் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனை, தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி, கொரோனா சிகிச்சை மையம் போன்றவற்றில் பணிபுரிவதற்காக மருத்துவ உதவியாளர்கள் மற்றும் செவிலியர்கள் என 106 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். எனவே செவிலியர்கள் கடந்த 2 மாதங்களாக பணியிலிருந்த நிலையில் திடீரென அவர்களுக்கு வேலை இல்லை எனக் கூறி மருத்துவமனை நிர்வாகம் திருப்பி அனுப்பிவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி செவிலியர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மனு கொடுக்கச் சென்றபோது போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது அனைவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்காமல் ஒரு சிலர் மட்டும் உள்ளே சென்று மனு அளிக்கலாம் என்று செவிலியர்களிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் செவிலியர்கள் அனைவரும் மனு அளிக்க அனுமதி கொடுக்க வேண்டுமென கோரி கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். இதனால் காவல்துறையினர் கயிறை பயன்படுத்தி அரண் போல் நின்று அவர்களை தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் செவிலியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செவிலியர்கள் அனைவரும் மேம்பாலம் கீழே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை கைது செய்ய கோரி காவல்துறையினர் வாகனத்தை வரவழைத்தனர். இதுகுறித்து செவிலியர்கள் கூறும்போது, நாங்கள் ஏற்கனவே பல்வேறு தனியார் மருத்துவமனையில் பணி பார்த்து வந்துள்ளோம். ஆனால் தற்போது கொரோனா மையத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் ஊதியத்தின் அடிப்படையில் பணியில் சேர்ந்தோம்.

இந்நிலையில் கொரோனா சிறப்பு முகாம்கள் காலியாக இருப்பதனால் வேலை இல்லை எனக் கூறி எங்களை திருப்பி அனுப்பிவிட்டனர். மேலும் 2 மாதங்களாக பணியாற்றியதற்கு சம்பளம் வழங்கவில்லை என்றும் வேலையை நம்பி ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய வேலையும் போய்விட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தனியார் மருத்துவமனையில் எங்களுக்கு வேலை தர மாட்டார்கள் என்பதால் மீண்டும் அரசு மருத்துவமனையில் எங்களுக்கு வேலை வழங்கி 2 மாத ஊதியம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செவிலியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு சமரச பேச்சுவார்த்தைக்கு பின் 10 நபர்கள் மட்டும் கலெக்டர் அலுவலகம் சென்று மனு கொடுத்து விட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |