Categories
தேசிய செய்திகள்

“செவ்வாய் தோஷம்” என்ன விட்டு போ…. கணவனின் துன்புறுத்தல்… பெண் எடுத்த முடிவு

செவ்வாய் தோஷம் இருப்பதாக கூறி மனைவியிடம் கணவன் விவாகரத்து கேட்டதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஷில்பா என்பவருக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சோனு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே ஷில்பா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது தாய் வீட்டிற்கு தனியாக வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்று எழுதி அதை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளார்.

காவல்துறையினர் கடிதத்தை கைப்பற்றிய போது அதில் ஷில்பா என் தற்கொலைக்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என்று எழுதியிருந்தார். இதுகுறித்து ஷில்பாவின் தந்தை கூறுகையில் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே சோனு மற்றும் அவரது குடும்பத்தினர் எனது மக்களை துன்புறுத்தி வந்தனர். உனக்கு செவ்வாய்தோஷம் இருக்கிறது அதனால்தான் உடல் நலக் கோளாறால் அடிக்கடி பாதிக்கப்படுகிறாய்.

என்னை விட்டு நீ போய்விடு எனக்கு உன்னிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று சோனு எனது மகள் ஷில்பாவை ஒரு வருடமாக துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் எங்கள் மகள் எங்களிடம் வந்தார்” எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சோனு மற்றும் அவர் குடும்பத்தினரை விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |