அறிவியல் சுற்றுவட்டப்பாதையில் செவ்வாய் கிரகத்தின் புதிய ஆய்வை மேற்கொண்டு வரும் ஹோப் விண்கலத்தின் தகவல்கள் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் பகிரப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா என்று பல ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செவ்வாய் கிரக பயண இயக்குனர் ஒமரான் ஷரப் “சயின்ஸ் ஆர்பிட்” என்று அழைக்கப்படும் அறிவியல் சுற்றுவட்ட பாதையை அமீரகத்தின் “ஹோப் விண்கலம் ” வெற்றிகரமாக அடைந்ததாகவும் அந்த விண்கலத்தில் 6 திரஸ்டர் என்ஜின்கள் பொருத்தப்பட்ட உள்ளதாகவும் அவை 8.36 நிமிடத்தில் குறிப்பிட்ட கால இடைவேளையில் இயக்கபட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் திரஸ்டர் இயக்கபடாமல் இருந்திருந்தால் விண்கலம் விண்வெளியில் தொலைந்து போக வாய்ப்பு இருப்பதாகவும் விண்கலத்தை சரியான திசையில் திருப்புவதற்கு பெரும் சவாலாக இருந்ததாகவும் அனைத்தையும் தாண்டி விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் விண்கலம் ஏற்கனவே பயணம் செய்து கொண்டிருக்கும் பிடிப்பு சுற்று வட்டப் பாதையின் “கேப்சர் ஆர்பிட்” 1063 கிலோமீட்டர் அதிகபட்சமாக 42426 கிலோமீட்டர் தொலைவில் பயணம் செய்து கொண்டு வருவதாகவும் அறிவியல் சுற்று வட்டப்பாதையில் சுற்றிவரும் ஹோப் விண்கலம் 20000 கி .மீ தொலைவிலிருந்தே 42461 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி தனது ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஹோப் விண்கலம் தனது ஆய்வை ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் தற்போது செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ள “செர்பெரஸ் போசே” பகுதியை அறிவியல் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்துள்ள ஹோப் விண்கலம் தெளிவாக படம் பிடித்து விண்வெளி கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள படத்தில் செவ்வாய் கிரகத்தில் விரிசல் விடப்பட்ட கோடுகள் மிகத்தெளிவாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த விண்கலம் 2 ஆண்டுகளுக்க அறிவியல் சுற்றுவட்டப்பாதையில் சுற்றித்திரிந்து தகவல்களை சேமித்து வருவதாகவும் அவ்வாறு சேமிக்கப்படும் அனைத்து தகவல்களும் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் பகிரப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.