Categories
உலக செய்திகள்

கற்களை உடைக்கும் ரோவர்…. பதிவு செய்யப்பட்ட சத்தம்…. பூமிக்கு அனுப்பிய விண்கலம்….!!

செவ்வாயில் கற்கள் உடைக்கப்படும் சத்தம் பதிவு செய்யப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த விண்கலமானது அங்கு மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசேரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதற்கு முன்பாக நாசாவின் ஆர்பிட்டர்கள் அனுப்பிய புகைப்படங்களை வைத்து ஜெசேரோ பள்ளத்தாக்கு பகுதியில் நீர் நிலைகள் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பள்ளத்தாக்கை ஆய்விற்காக நாசா தேர்ந்தெடுத்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெர்சவரன்ஸ் விண்கலத்தில் இருக்கும் ரோவர் சாதனம் மூலம் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

அதில் அங்கிருக்கும் மலைகள், பாறைகள், படிமங்கள் போன்றவை இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் துல்லியமாக தெரிந்தது. இதனை தொடர்ந்து  செவ்வாய் கிரகத்தில் உள்ள சரளைக் கற்கள் மீது ரோவர் சாதனம் ஏறும் போதும் அந்த சாதனத்தில் உள்ள கதிர்வீச்சு கற்களை உடைக்கும் போதும் ஏற்படும் சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை ரோவர் சாதனத்தில் இருக்கும் மைக்ரோபோன் பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது. குறிப்பாக ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமான சத்தத்தை பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அது அடுத்த கட்ட ஆய்விற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அமெரிக்கா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |