Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அந்த பக்கமே போக முடியல… இதை சீக்கிரம் சரி பண்ணுங்க… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

கான்கிரீட் சிலாப்புகள் உடைந்து கழிவுநீர் வெளியே செல்வதால் பொதுமக்கள் மிகவும்  சிரமப்படுகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவில் செயல்பட்டு வரும் தினசரி காய்கறி சந்தைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த சந்தைக்கு முன்பு இருக்கும் நுழைவு வாயில் அருகே சாக்கடை கால்வாய் செல்கின்றது. இதனை அடுத்து இந்த சாக்கடை கால்வாய் மீது போடப்பட்டிருந்த கான்கிரீட் சிலாப்புகள் உடைந்து விட்டதால் கழிவுநீர் செல்ல இடமில்லாமல் அங்கேயே தேங்கி கிடக்கிறது.

இதனால் சந்தைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கழிவுநீர் சீராக செல்வதற்காக உடைந்த சிலாப்புகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |