Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கன்னத்தில் காயம்…. கணவனை இழந்த பெண்ணிற்கு தொந்தரவு… வலை வீசி தேடும் போலீசார்…!!

கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள இருளாண்டி காலனியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது இரண்டு மகன்களும் வேலை தொடர்பாக வெளியூருக்கு சென்ற போது, 47 வயதான அந்தப் பெண் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் இருதயராஜ் என்பவர் மதுபோதையில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறி அடித்து வெளியே ஓடிய போது, அந்த பெண்ணை மடக்கி வீட்டுக்குள் தள்ளி மீண்டும் அவரது கன்னத்தை கடித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண் கதறி சத்தம் போட்ட போது, இருதயராஜ் பயந்து அங்கிருந்து ஓடி விட்டார். அதன்பின்னர் தனது மகன்களிடம் இந்த சம்பவத்தை கூறிய அந்தப் பெண் அவர்களின் உதவியுடன் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு வீங்கியதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப் பதிந்து தப்பியோடிய இருதயராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |