14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் டெக்ஸாஸில் உள்ள விச்சிடா பால்ஸ் பகுதியில் 14 வயது சிறுமி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த வீட்டின் பக்கத்தில் இருந்த கால்வின் டோட் ஜூனியர் என்ற நபர் சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மயக்கம் அடைந்த சிறுமி அப்படியே தூங்கியுள்ளார். பின்னர் அவர் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் இதுகுறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கால்வினை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர் முதலில் தன் மீதான குற்றத்தை மறுத்து பேசியுள்ளார். அதன்பின் அவர் மது போதையில் தான் இவ்வாறு செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனை அடுத்து மருத்துவ பரிசோதனையின் போது சிறுமி உடலில் ஆங்காங்கே நக கீறல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் கைது செய்து அவரின் ஜாமீன் தொகையை $25,000ஆக நிர்ணயித்துள்ளது.