Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“படிக்கும் போது பள்ளியில் பாலியல் துஷ்பிரயோகம்”…. பிரபல நடிகை குற்றச்சாட்டு…!!!!!

உறைவிட பள்ளியில் மருத்துவ பரிசோதனையின்போது நான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல நடிகை கூறியுள்ளார்.

பாரிஸ் விட்னி ஹில்டன் நடிகை, சமூக ஆர்வலர், ஊடக ஆளுமை, தொழிலதிபர், மாடல் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டவராக இருக்கின்றார். இவர் சென்ற 1990 ஆம் வருடம் தனக்கு 17 வயதாக இருந்தபோது 11 மாதங்களுக்கு ப்ரோவோ கேன்யன் தங்கி படிக்கும் பள்ளியில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது பள்ளியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் என்ன நடக்கின்றது என்பது புரியவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது, அதிகாலை 3 அல்லது 4 மணி இருக்கும். அவர்கள் என்னையும் மற்ற பெண்களையும் அந்த அறைக்குள் அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்வார்கள். ஆனால் அவர்கள் மருத்துவராக இருக்க மாட்டார். இரண்டு வெவ்வேறு ஊழியர்களாக இருப்பார்கள். அங்கு அவர்கள் எங்களை மேசையில் படுக்க வைத்து தங்கள் விரல்களை எங்கள் உறுப்புக்குள் வைப்பார்கள். அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் அது நிச்சயமாக அவர்கள் மருத்துவர் அல்ல. அது உண்மையில் பயமாக இருந்தது. நான் அதைப்பற்றி யோசிக்கிறேன். இப்போது நினைத்து பார்த்தால் நிச்சயமாக அது பாலியல் துஷ்பிரயோகம் என கூறியுள்ளார்.

Categories

Tech |