Categories
உலக செய்திகள்

தண்ணியை குடுத்து இப்படி பண்ணிட்டான்..! நள்ளிரவில் நடந்த சம்பவம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் நள்ளிரவில் 14 வயது சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கெனோஷா கவுண்ட் பகுதியில் வசித்து வரும் செவர்லோட் மேஷன் ( 18 ) என்னும் இளைஞருக்கு 14 வயது சிறுமி ஒருவருடன் நட்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி அன்று மேஷன் அந்த 14 வயது சிறுமியை முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த சிறுமியும் 12.30 மணிக்கு மேஷன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து மேஷனின் பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் 14 வயது சிறுமியும், மேஷனும் டிவி பார்த்ததாகவும் அப்போது மேஷன் அந்த சிறுமிக்கு தண்ணீரை கொடுத்து மயக்கமடைய செய்ததாகவும் சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பிறகு மேஷன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மேஷன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் மேஷனுக்கு $15000 ஜாமீன் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |