பூங்காவில் வைத்து பள்ளி மாணவியை 3 சிறுவர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனில் டெப்ட்போர்ட்டில் பெப்பிஸ் என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு கடந்த மார்ச் 22ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் 15 வயதுடைய ஒரு மாணவி பேருந்தில் இருந்து இறங்கி பூங்காவிற்குள் சென்று ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளார். உடனே 17வயது வயதுடைய ஒரு மாணவன் அந்தப் பெண்ணின் அருகில் சென்று உட்கார்ந்துள்ளான். அவனுடன் இன்னும் இரண்டு பேர் இருந்துள்ளனர்.
இவர்கள் மூவரும் அந்த மாணவியின் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி உள்ளனர். அவர்களை பிடிப்பதற்காக மாணவியும் அவர்களைப் பின் தொடர்ந்துள்ளார். அதன்பின் அந்த மூன்று சிறுவர்களும் சிறுமியை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாணவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் பட்டப்பகலில் பூங்காவில் வைத்து நடந்ததால் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் போலீசாரிடம் மாணவி கொடுத்த அடையாளத்தின் பேரில் அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த தகவலும் தெரியாததால் போலீசார் பொதுமக்களை நாடியுள்ளனர். இது பற்றி யாரேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறையினரை அணுக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.