Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம் – பனியன் தொழிலாளி கைது

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த கலாதரன், குடும்பத்தினருடன் திருப்பூரில் தங்கி இருந்து தனியார் நிறுவனம் ஒன்றில்  பனியன் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.  குடும்ப பிரச்சினையின் காரணமாக மனைவி குழந்தைகளை கலாதரனை விட்டுப் பிரிந்து கேரளாவிற்கு திரும்பிவிட தனிமையில் வசித்து வந்துள்ளார் கலாதரன்.

இந்நிலையில் வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு கலாதரனை கைது செய்தனர். அப்போது கலாதரன் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கலாதரன் போக்சோ சட்டத்தில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |