மதுரையில் பெண்ணிடம் சில்மிஷம்செய்த வாலிபன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்பவரின் மனைவி பாண்டியம்மாள். இவருக்கு 50 வயதாகிறது. இவர் விருதுநகரில் இருந்து நேற்று குராயூருக்கு அரசு பஸ்சில் பயணம் செய்த நிலையில் ,கரிசல் குளத்தைச் சேர்ந்த 32 வயதான சமையன், பாண்டியம்மாளிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதை தட்டிக்கேட்ட பாண்டியம்மாளை அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து கள்ளிக்குடி போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் காளிராஜன் விசாரணை நடத்தி சமையனை அதிரடியாக கைது செய்தார்.