மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியருக்கு மகிளா நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நரியன்புதுப்பட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். இந்த விவகாரத்தில் மகிளா நீதிமன்றம் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கும், பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.