Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அலறி துடித்த விதவை பெண்… ஊழியரின் மூர்க்கத்தனமாக செயல்… CCTC கேமராவால் வெளிவந்த உண்மை…!!

விதவை பெண்ணை காரில் கடத்திச் சென்று டீக்கடை ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கீழ்பாக்கம் பகுதியில் 35 வயதான கணவனை இழந்த பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண்ணை காணவில்லை என அவரது சகோதரர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒருவர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் செல்லும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அங்குள்ள டீக்கடையில் வேலை பார்க்கும் அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல் என்பவர் விதவைப் பெண்ணை காரில் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டதோடு, சக்திவேலை கைது செய்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் விதவை  பெண்ணை காரில் கடத்தி சென்ற சக்திவேல் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |