9 – ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 9 – ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் சித்தியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அந்த மாணவியின் உறவினரான ஒரு மாணவன் 9 – ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு ஊர் சுற்றி திரிந்து வந்துள்ளான். இதனை அடுத்து அந்த மாணவன் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளான். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது நீ என்னை காதலிக்கா விட்டால் உன்னை கொலை செய்து விட்டு, நானும் தற்கொலை செய்து கொள்வேன் என அந்த மாணவன் மிரட்டியுள்ளான்.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவி மாணவனை காதலிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவிக்கு மாணவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். அதன்பிறகு அந்த மாணவியின் சித்தியிடம் மாணவன் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சித்தி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று அந்த மாணவன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.