பத்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்டுக்கு நீதிபதி 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் பிசியோதெரபிஸ்ட் தங்கவேல். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் தனது உறவினரின் மகளை டியூஷன் எடுப்பதாக கூறி தன் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அதன்பின் அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தங்கவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கானது நீதிபதி புருஷோத்தமன் தலைமையில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் மொத்தம் 18 பேர் தங்க வேலுவுக்கு எதிராக சாட்சி அளித்துள்ளனர். இந்த சாட்சியை அடிப்படையாக வைத்து தங்கவேலுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் பத்தாயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவரை நீதிபதி எச்சரித்துள்ளார்.