3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள செவ்வந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மரிய சூசை. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதன் காரணமாக குழந்தையின் தாய் மரியசூசை மீது நன்னிலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மரியசூசையை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில் மகிளா நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் மரியசூசைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.