நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரவேல்புரம் பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். பிரபல ரவுடியான இவர் மீது தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் முருகனும், அழகேசபுரம் பகுதியில் வசிக்கும் கோகுல்ராம் என்பவரும் மோட்டார் சைக்கிளில் தாளமுத்து நகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற 40 வயது பெண்ணை வலுக்கட்டாயமாக மிரட்டி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளனர். அதன்பின் அந்த பெண்ணை கல்மேட்டில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.
அப்போது முருகன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதன்பின் மறுநாள் காலையில் அந்த பெண்ணை அவரது வீட்டின் அருகில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து கோகுல்ராமும் அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்ததால் கோகுல்ராம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த முருகன் மற்றும் கோகுல்ராம் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.