அமெரிக்க நாட்டில் பாலியல் நோய் தொற்று கொண்ட தன் காதலனுடன் வாகனத்தில் உறவு வைத்ததால் பாதிக்கப்பட்ட பெண் 40 கோடி காப்பீட்டுத்தொகை கோரியுள்ளார்.
அமெரிக்க நாட்டின் மிசோரி நகரத்தில் பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் காதலனுடன் வாகனத்தில் ஒரு பெண் பாலியல் உறவு வைத்திருக்கிறார். எனவே, அந்த பெண்ணிற்கு பாலியல் நோய் ஏற்பட்டது. அவர் ஹெச் பி வி தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தனக்கு தொற்று ஏற்பட்டதால் கெய்கோ நிறுவனத்திடம் அந்த பெண் இழப்பீடு கோரியிருக்கிறார்.
அவர் தன் குற்றச்சாட்டில், காதலர் மூலம் தனக்கும் பாலியல் நோய் ஏற்பட்டு விட்டது. அவருக்கு முன்பே இந்த பாதிப்பு இருப்பது தெரியும். அதனால் ஏற்படும் அபாயம் பற்றியும் தெரியும். இருந்தும் அவர் அந்த நோய் குறித்து என்னிடம் தெரிவிக்காமல் இருந்து விட்டார். எனவே, இன்சூரன்ஸ் செய்யப்பட்ட அந்த வாகனத்தில் வைத்து பாலுறவு நடந்ததால், உண்டான இந்த பாதிப்பிற்கு இழப்பீடாக 40 கோடி ரூபாய் கெய்கோ நிறுவனம் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் அந்தப் பெண்ணிற்கு சார்பாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அந்நிறுவனம் இதற்கு மேல் முறையீடு செய்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் கொள்கையில் இந்த கோரிக்கை ஏற்கப்படாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், மிசோரி நீதிமன்றத்தில் இந்த வழக்கு உறுதிசெய்யப்பட்டது.
எனவே, அந்தப் பெண்ணிற்கு 40 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த கெய்கோ நிறுவனம் பெடரல் நீதிமன்றத்தில் முறையிட தீர்மானித்திருக்கிறது.