சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரம்பூர் பகுதியில் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை மேலபோலகம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து சிறுமி தனது உறவினர் வீட்டில் இருந்துள்ளார். அங்கு முருகவேல் என்பவர் சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து சிறுமி தனது சொந்த ஊரான பெருஞ்சேரிக்கு வந்து அங்கு ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அந்த சமயத்தில் சிங்காரவேலன் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மூன்று மாதம் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு தினேஷ்குமார், முருகவேல், சிங்காரவேலன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்.