பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தின் பீட்டர்பாரோ பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ்டோபர் ராபர்ட்சன். இவர் முன்னாள் காவல்துறை அதிகாரி ஆவர். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பெண் ஒருவரை பாலியல் தொல்லை செய்ததாக கூறி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த புகாரின் பேரில் கடந்த ஜனவரி மாதம் விசாரணை தொடங்கியுள்ளது. இதில் ராபர்ட்சன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் வரும் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.