பாலியல் தண்டனையில் ஈடுபடுவோர்களுக்கு சட்டத்தில் தூக்கு தண்டனை வழங்க வழி இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், சென்ற வாரம் சிவகாசி அருகே 8 வயது சிறுமி வடமாநிலத்தவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது. அவர்களது பெற்றோர்கள் மிகுந்த வேதனையுடன் இருக்கிறார்கள்.
இது போன்ற சம்பவங்களை எல்லாம் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் பள்ளி கல்லூரிகளில் பெண்களுக்கு ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு, அதற்கான கொடூரமான தண்டனைகள் சட்டங்கள் ஏராளமாக உள்ளன.
ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த தான் தயங்குகிறோம். ஹைதராபாத்தில் பாலியல் தண்டனையில் ஈடுபடுபவர்களுக்கு உடனே கொடூர தண்டனை வழங்கப்படுவது வரவேற்கபடுகிறது. ஆகையால் இந்தியா முழுவதும் சட்டத்தின்படி கொடூரமான தண்டனைகளை பாலியல் தண்டனையில் ஈடுபடும் கொடூரர்களுக்கு வழங்கவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.