Categories
தேசிய செய்திகள்

பாலியல் குற்றங்கள் : எந்த மாநிலம் முதலிடம் ? அதிர்ச்சி அறிக்கை …!!

நாட்டில் பெண்களுக்கெதிராக நடைபெறும் குற்றம் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் நாடு முழுவதும்இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிராக 1.75 லட்சம் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

 ஆதில் 2015ஆம் ஆண்டில் 34,094 வழக்குகளும் , 2016ஆம் ஆண்டில்  38,947 வழக்குகளும்  2017ஆம் ஆண்டில் 32,559 வழக்குகளும், 2018ஆம் ஆண்டில் 33,356 வழக்குகளும் என பதிவாகியுள்ளது.

இதில் அதிக குற்றங்கள் நடைபெற்ற மாநிலமாக  மத்தியப் பிரதேசம் 25,259 வழக்குகளுடன் முதல் இடத்திலும் , 19,406 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உத்தரப்பிரதேஷமும் , 18, 542 வழக்குகளுடன்  ராஜஸ்தான் மூன்றாவது இடத்திலும் , 

15,613 வழக்குகளுடன் மகாராஷ்டிரா 4ஆவது இடத்திலும் , 8,693 வழக்குகளுடன்  டெல்லி 5ஆவது இடத்திலும் உள்ளது. இதில் 8.8 சதவீதம் பெண்களுக்கெதிரான நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்களாகும்.

Categories

Tech |