புதுச்சேரியின் முதலியார்பேட்டை பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவருக்கு முதலியார் பேட்டையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி தனியாக இருந்த சமயம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த அலெக்சாண்டர் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதை செல்போனில் படம் எடுத்து மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவரத்தை அறிந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அலெக்சாண்டரை போஸ்கோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.