மனவளர்ச்சி குன்றிய சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி கொலை செய்த நபருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் வடமாநிலத்தில் இருந்து வந்த டேனிஷ் படேல் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் மனவளர்ச்சி குன்றிய சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து சிறுவனை கொலை செய்த டேனிஷ் படேல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதியான சத்யா மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றத்திற்காக டேனிஷ் படேலுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் டேனிஷ் படேலுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் மூன்று பிரிவுகளின் கீழ் மரண தண்டனையும் விதித்துள்ளார். அதனுடன் கொலைசெய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.