Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அவ நம்பர் வேணும்” கொடுக்க மறுத்த சிறுமியை…. பாலியல் தொந்தரவு செய்த வாலிபர்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்டக சாலை பகுதியில் ஸ்டெபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் தனது உறவினர் பெண்ணை காதலித்ததை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் ஸ்டெபினை கண்டித்துள்ளனர். இந்நிலையில் இவர் காதலித்த பெண்ணின் வீட்டின் முன்பு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம், ஸ்டெபின் தான் காதலிக்கும் பெண்ணின் செல்போன் நம்பர் வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் அந்த சிறுமி அதனை ஏற்காததால் ஸ்டெபின் அவருக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனை பார்த்த ஸ்டெபின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து குலசேகர பட்டினம் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவான ஸ்டெபினை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |