9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கூலி தொழிலாளிக்கு நீதிபதி 1௦௦௦ ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு முருகன் 9 வயது சிறுமிக்கு இரவு முழுவதும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதற்கிடையில் காணாமல் போன சிறுமியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை முருகனிடமிருந்து தப்பித்து சென்ற அந்த சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். அதன் பின் சுமார் 2 ஆண்டுகள் முருகன் தலைமறைவாக இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு முருகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளியான முருகனுக்கு 1௦௦௦ ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.