Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த டிரைவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டிற்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு-கேரளபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திரம் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியின் தாயார் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு வீட்டிற்குள் புகுந்த பாலகிருஷ்ணன் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

மேலும் இதனை யாரிடமும் சொல்ல கூடாது என பாலகிருஷ்ணன் அந்த மாணவியை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பால கிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |