12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மங்களபுரம் பகுதியில் செண்பக மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே தனது தாயாரிடம் நடந்த அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 12 வயது சிறுமிக்கு செண்பக மூர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் செண்பகமூர்த்தியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.