முதியவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சித்தளி கிராமத்தில் கோவிந்தராஜ் என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த முதியவர் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக கோவிந்தராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.