சப்-இன்ஸ்பெக்டர் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டராக சதீஷ்குமாருக்கும், ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனை அடுத்து சதீஷ்குமார் தனது கள்ளக்காதலியின் மகளான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் துப்பாக்கி முனையில் அந்த மாணவியை சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கு உடந்தையாக இருந்த அந்த மாணவியின் தாயும், சகோதரியும் தந்தையிடம் நடந்ததை கூற கூடாது என்று அந்த மாணவியை மிரட்டியுள்ளனர். ஆனால் நடந்த அனைத்து சம்பவத்தையும் அந்த சிறுமி தனது தந்தையிடம் கூறி அழுததால் அதிர்ச்சி அடைந்த அவர் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் படி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சப்-இன்ஸ்பெக்டரான சதீஷ்குமார், அவருக்கு உடந்தையாக இருந்த அந்த சிறுமியின் தாய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.