Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் இருந்த நபர்… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அண்ணன்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

திருச்சி மாவட்டத்திலுள்ள , கைலாச நகர் பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை விசயமாக மாதவன்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலி மலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாதவன் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தனியாக 12 வயது சிறுமி ஒருவர் இருப்பதை கண்டு வீட்டிற்குள் புகுந்து கதவை உள்புறமாக தாழ்பாள் போட்டுள்ளார்.

அதன்பின் மாதவன் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த சிறுமியின் அண்ணன் கதவு உள்புறமாக தாழ்பாள் போட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மாதவன் தனது தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதைப் பார்த்து உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதற்கிடையில் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்த மாதவனை அனைவரும் இணைந்து பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாதவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |