பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த ரயில்வே ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன் மலை பகுதியில் புருசோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் புருஷோத்தமன் 9-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை வழிமறித்துள்ளார். அதன் பிறகு புருஷோத்தமன் மாணவியை பாலியல் ரீதியாக கிண்டல் செய்ததோடு, செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி தொந்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.